Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/அன்பு இருக்குமிடத்தில் உண்ணுங்கள்

அன்பு இருக்குமிடத்தில் உண்ணுங்கள்

அன்பு இருக்குமிடத்தில் உண்ணுங்கள்

அன்பு இருக்குமிடத்தில் உண்ணுங்கள்

ADDED : ஏப் 18, 2010 01:23 PM


Google News
Latest Tamil News
* கடவுளின் ராஜ்யத்தை எதனோடு ஒப்பிடலாம்..? அது கடுகுமணி போன்றது. அது விதைக்கப்படும் போது பூமியிலுள்ள விதைகள் அனைத்திலும் மிக மிகச் சிறியதாயிருக்கிறது. ஆனால், விதைக்கப்படும் பின்போ, அது வளர்ந்தோங்கி சகல பூண்டுகளையும் விடப் பெரியதாகி வானப்பறவைகளை அதன் நிழலின் கீழ் வந்து வசிக்குமளவு பெரும் பெரும் கிளைகளை விடுகிறது.

* தீபத்தைக் கொளுத்தி மரக்காலின் கீழ் வைப்பதில்லை. தீபக்காலின் மேல்தான் வைப்பார்கள். அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தரும். அதுபோல, மனிதர்கள் உங்கள் நற்காரியங்களைக் காணும் பொருட்டு உங்கள் ஒளி அவர்கள் முன் பிரகாசிக்கட்டும். பரமண்டலத்திலுள்ள உங்கள் பிதாவை அவர்கள் போற்றட்டும்.

* உங்கள் இருதயங்களிலே கசப்பான பொறாமையும், சச்சரவையும் வைத்திருப்பவர்களானால் நீங்கள் பெருமை கொள்ள வேண்டாம். உண்மைக்கு எதிராகப் புளுகவும் வேண்டாம்.

* கொழுத்த எருதுக்கறியைப் பகையோடு உண்பதைவிட அன்பு இருக்குமிடத்தில் வெறும் இலைக்கறியை உண்பது நல்லது.

-பைபிள் பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us