Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/விடாமுயற்சி செய்யுங்கள்

விடாமுயற்சி செய்யுங்கள்

விடாமுயற்சி செய்யுங்கள்

விடாமுயற்சி செய்யுங்கள்

ADDED : ஆக 08, 2010 09:08 AM


Google News
Latest Tamil News
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.

* உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் கடவுள் ஆசி வழங்குவார்.

* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.

* நாம் செய்த நன்மை தீமைக்குக் கைமாறு பெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்.

* நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய்.

* கடவுளுக்காக நீங்கள் உழைப்பது வீண்போகாது என்பதை அறிந்து, கடவுளின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.

* சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்.

* வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும். சிறிது சிறிதாகச் சேர்ப்பவனின் செல்வமே பெருகும். விடாமுயற்சியுடையோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

-பைபிள் பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us