Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/ஆதாரம் நீயே அம்மா!

ஆதாரம் நீயே அம்மா!

ஆதாரம் நீயே அம்மா!

ஆதாரம் நீயே அம்மா!

ADDED : ஜன 31, 2009 09:26 AM


Google News
Latest Tamil News
<P>* காளித்தாயே! உன்னை புகழ்ந்து சொல்வதற்கு என்னால் இயலாது. அறிவால் அறியவும் முடியாது. நீ அரிய வானவெளி போல விரிந்து நிற்பவள். அண்ட கோடிகளை வானில் அமைத்தவளும் நீயே. இப்பூமண்டலத்தையே அணுஅணுவாகப் பொடியாக்கினால் எத்தனை அணுக்கள் உருவாகுமோ அத்தனை யோசனை தூரத்தை அண்டங்களுக்கு இடையில் உண்டாக்கினாய். கோலம் கொண்டு அருட்காட்சி தருபவளே! தாயே! உன்னை வணங்குகிறேன்.<BR>* அரசனை மக்கள் நன்கு அறிவர். பல கஷ்டங்களை அனுபவித்து, தனக்கு நன்மை செய்யும் தந்தையை அவரது குழந்தை நன்கறியும். ஆனால், கோடி அண்டங்களை எல்லாம் இயக்கி, மக்களைக் காத்து நிற்கும் உன் அழகு வடிவத்தை, என்னால் எப்படி நேரில் காண முடியும்? எனவே, இந்த சிறு பூமியில் உன்னுடைய கோவில்களையாவது நாடிச் சென்று புகழ் பாடி வழிபட நல்லருள் செய்.<BR>&nbsp;சூரியனை வானில் ஏந்தி நிற்பதும் நீயே. கருமையான மேகத்திரளாய் நிற்பவளும், எல்லா உயிர்களுக்கும் உயிர்நிலையான ஆதாரமாகவும், சக்தியாகவும், உலகிலுள்ள தொழில்களை எல்லாம் இயக்குபவளாகவும் இருக்கும் அன்னையே! உன்னை வணங்குகின்றேன்.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us