Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/அல்லல் தீர்க்க ஓடி வா!

அல்லல் தீர்க்க ஓடி வா!

அல்லல் தீர்க்க ஓடி வா!

அல்லல் தீர்க்க ஓடி வா!

ADDED : ஜன 18, 2009 10:30 AM


Google News
Latest Tamil News
<P>* கணபதியப்பனே! எனக்கு வேண்டும் வரங்களை உன்னிடம் கேட்டு பாடுவேன். அவற்றை காது கொடுத்து கேள். என் மனம் சலனப்படாமல் நிலைபெற்றிருக்க வேண்டும். என் அறிவில் இருளே தோன்றாமல் தெளிவுடையதாக இருக்க வேண்டும். நினைத்த போது உன் அருள் கிடைத்திட வேண்டும். செல்வச் செழிப்புடன் என்னை வாழச் செய்ய வேண்டும்.<BR>* கணபதியே! களிப்போடு நான் வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வுலகில் பழியில்லாத உயர் வாழ்வு பெற அருள்புரிய வேண்டும். கடமைகளைத் தவறாது ஆற்ற கருணை செய்ய வேண்டும். ஒளியாகிய கல்விச் செல்வத்தை அள்ளி வழங்க வேண்டும்.<BR>* மணக்குள விநாயகனே! அறம், பொருள், இன்பம், வீடு பேறு என்னும் முக்தி ஆகிய நால்வகைப் பயன்களையும் எனக்கு அருள வேண்டும். என்னை அடக்கியாளும் சாமர்த்தியத்தை தந்து உதவ வேண்டும். என்னை அடக்கக் கற்றுக்கொண்டால், நால்வகைப் பயன்களும் தானே என்னை வந்தடையும். <BR>* கணபதியே! கருணையே உருவான தயாபரா! பிரணவ சொரூபமாக விளங்குபவனே! தவம் செய்யும் வழிமுறைகளை நான் அறியாதவனாக இருக்கிறேன். என் அல்லல்களைத் தீர்க்கவும், என் பயத்தை நீக்கி 'அஞ்சேல்' என்று சொல்லியும் ஓடி வர பிரார்த்திக்கிறேன்.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us