Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/மங்கள வாழ்வின் அடிப்படை

மங்கள வாழ்வின் அடிப்படை

மங்கள வாழ்வின் அடிப்படை

மங்கள வாழ்வின் அடிப்படை

ADDED : அக் 10, 2011 09:10 AM


Google News
Latest Tamil News
* தனியாகப் பயணம் செய்ய நேர்ந்தால் குலதெய்வத்தை மனதில் நினையுங்கள். பாதுகாப்பான பயணம் அமையும்.

* விண்வெளி, மேகம், மரம், பறவை என எல்லா இடங்களிலும் கோவிந்தனைக் கண்டு அவனுடன் கலக்க முயற்சிக்க வேண்டும்.

* அமைதியாக அமர்ந்து உயர்ந்த, அமைதி தரும், பலன் தரும், துணிவும் உறுதியும் அளிக்கும் சிந்தனைகளால் அறிவை நிரப்பி இறைவனைத் தியானியுங்கள்.

* தெய்வ நம்பிக்கை உள்ளவர்களும், இல்லாதவர்களும் மற்றும் எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்களானாலும் அவர்கள் தினமும் தியானம் செய்வது நல்லது.

* பக்தர்களின் மத்தியிலிருந்தால் மனம் இறைவனைப் பற்றிச் சிந்திப்பது நிச்சயம். சேர்க்கைக்கும், செய்கைக்கும் தக்கப்படி மனதில் குணமும் மாறுபடுகிறது.

* மனதிலுள்ள குழப்பங்களை நீக்கி தெய்வீகத் தெளிவு பெறச் செய்வதே மங்களகரமான வாழ்க்கைக்கு அடிப்படை.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us