Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/விதியையும் மகிழ்ச்சியுடன் ஏற்போம்

விதியையும் மகிழ்ச்சியுடன் ஏற்போம்

விதியையும் மகிழ்ச்சியுடன் ஏற்போம்

விதியையும் மகிழ்ச்சியுடன் ஏற்போம்

ADDED : மார் 28, 2009 08:06 AM


Google News
Latest Tamil News
<P>நம் அறிவில் தெய்வத் தன்மை இருக்கிறது. நாம் ஒரு தேவனைப் போலே சிந்தனை செய்ய வல்லவர்கள். இனி நம் செயல்களில் எல்லாம் தெய்வத்தன்மை விளங்குவதற்குரிய வழி செய்ய வேண்டும். <BR>தெய்வம் நம்முள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி நம்மைத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். உலகம் என்பது நமது அறிவுக்குட்பட்டது. ஆதலால், மனம் நமக்கு வசப்படும் போது, உலகமும் நம் வசமாகி விடும். நாழிகைகள் கழியலாம். நாட்கள் செல்லலாம். பருவங்கள் மாறலாம். ஆண்டுகள் கடக்கலாம். நாம் மாறுபடக்கூடாது. நாம் எக்காலமும் உறுதியாகவும், நிலையாகவும் இருக்க வேண்டும். இடைவிடாமல் தொழில் புரிந்து இவ்வுலகத்தில் பெருமை பெற முயற்சிக்க வேண்டும். அப்படி முடியாவிட்டால் 'விதி வசம்' என்று அந்தச் சூழலையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவா! ஞான ஆகாசத்தில் நின்று உன்னிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுக்கிறேன். இப்பூமண்டலத்தில் அன்பும் பொறுமையும் விளங்கட்டும். துன்பமும் அடிமையும் நோயும் சாவும் நீங்கட்டும். உயிர்களெல்லாம் இன்புற்று வாழட்டும். உன் திருவுள்ளம் இரங்கி அப்படியே ஆக வேண்டுமென்று அருள்புரிவாயாக.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us