Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தர்மவழியில் ஆட்சி நடக்கட்டும்

தர்மவழியில் ஆட்சி நடக்கட்டும்

தர்மவழியில் ஆட்சி நடக்கட்டும்

தர்மவழியில் ஆட்சி நடக்கட்டும்

ADDED : செப் 08, 2010 07:09 PM


Google News
Latest Tamil News
* தர்மம் செய்யுங்கள், சத்தியத்தை பின்பற்றுங்கள், தீமையை விலக்குங்கள் என்ற நல்ல கருத்துக்களை முழங்கியபடியும், வாழ்வுக்கு வழிகாட்டும் வேதங்களை ஓதியபடியும் கண்ணனே வருவாயாக.

* எங்களுடைய இந்த அரிய பூமி என்னும் இப்பயிர் செழித்து மங்கலமாய் நிலைபெற்று வாழ அருள்மழை பொழியும் மழைமேகம் போன்றவனே! கண்ணா! மலர் போன்ற கண்களைக் கொண்டவனே! உன் பாத கமலங்களைப் போற்றுகின்றேன்.

* கண்ணா! உன் திருவடிகளைப் பணிந்து போற்றினால், ஒப்பிலாத உயர்வாழ்க்கை உண்டாகும். கல்வி பெருகும். வீரமும், தர்மவழியில் நடக்கும் தன்மையும் உண்டாகும்.

* பொருளற்ற வீணான வெற்றுவாழ்க்கையை நாங்கள் விரும்பவில்லை. உன் போதனைகளைப் பின்பற்றும் அடியவர்களான எங்களுக்கு புகழும், பொருளும் கிடைக்க வழிகாட்டுவாயாக.

* என் உயிரில் கலந்து அருள்செய்யும் கண்ணனே! கருவினைப் போல் என்னுள் வளர்பவனே! தேவர்கள் போற்றும் தேவாதிதேவனே! செந்தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமியோடு இணைந்திருப்பவனே! எங்களுக்கு அருள்செய்வாயாக.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us