Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/இருளைப் போக்கும் கண்ணன்

இருளைப் போக்கும் கண்ணன்

இருளைப் போக்கும் கண்ணன்

இருளைப் போக்கும் கண்ணன்

ADDED : டிச 13, 2008 07:49 PM


Google News
Latest Tamil News
<P>ஏ! மனமே! கண்ணனின் திருவடிகளை எண்ணிவிடு. அழியாத வண்ணம் நம்மை என்றென்றும் காப்பது திண்ணம் என்று உறுதியாக நம்பிவிடு. கருமேனிப் பெருமானாகிய கார்மேக வண்ணன் நமக்கு நிதியும், பெருமையும், புகழும் தந்தருள்வான். கண்ணனின் கழலடியைப் பணிந்து போற்றினால் இம்மண்ணில் தேவர்கள் போல நல்வாழ்வு உண்டாகும். தீமை அழிந்து நன்மை எங்கும் தழைத்தோங்கும். தி பாடல்கள் புனையும் புலமை மிக்கவர்களே! நிலமகளாகிய பூமாதேவியின் தலைவனான கண்ணபெருமானின் புகழினைப் போற்றி பாடல்கள் எழுதுங்கள். இருள் வாழ்வை போக்கி ஒளியுள்ளதாக்கிடுவான் கண்ணன். அசுரர் போல வரும் பகைதனைப் போக்கிடுவான். கலிதோஷம் நீக்கிடுவான். தவம் செய்வோர் கண்ணனை நினைந்து தவம் செய்யுங்கள்.தி ஒரே சக்தியே பலவாறாக நின்று எவ்விடத்திலும் நின்று திகழ்கிறது. என்றும் உலகில் நிலைத்திருக்கும் குன்றாத அருட்சுடரான கண்ணனை பல நாமங்களில் திகழ்கிறான். கண்ணபெருமானே! உன் திருவடிகளைப் போற்றுகிறேன். காணும் இடமெல்லாம் கண்ணபெருமானே நிறைந்திருக்கிறான்.பொன்னான அவனது திருப்பாதங் களை துதித்து மகிழ்வோம்.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us