Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உழைப்பில் தான் சுகம்

உழைப்பில் தான் சுகம்

உழைப்பில் தான் சுகம்

உழைப்பில் தான் சுகம்

ADDED : டிச 29, 2011 08:12 AM


Google News
Latest Tamil News
* உடலை வெற்றி கொள், அது எப்போதும் நீ சொன்னபடி கேட்க வேண்டும், அது சொன்னபடி நீ கேட்ககூடாது, அது மிருகம், நீ தேவன், அது யந்திரம், நீ இயக்குபவன்.

* எப்போதும் பாடுபடு, எப்போதும் உழைத்து கொண்டிரு, உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப்பேய்கள் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப் போய்விடும்.

* தீர்க்காயுள், நோயின்மை, அறிவு, செல்வம் ஆகிய நான்கும் நமக்கு இன்றியமையாதவை. அவற்றை இறைவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.

* உன்னை மறந்துவிடு, தெய்வத்தை முழுமையாக நம்பு. உண்மையை பேசு. நியாயத்தையே எப்போதும் செய். இதைக் கடைபிடித்தால், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.

* கண்ணாடி போன்ற மனதில், அம்பாளை தியானம் செய்தால், அவளது சாயல் மனதில் படும். அதில் கிடைக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை.

* எப்போதும் சிவனையே நினைத்திருங்கள், வானத்தில் செல்லும் சூரியன் உச்சிவானிற்கு வந்ததும் எப்படி கிணற்றுக்குள் தெரிகிறதோ, அதேபோல் உனக்குள் சிவனைக் காணலாம்.

-பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us