Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நல்ல எண்ணங்களைக் கொடு

நல்ல எண்ணங்களைக் கொடு

நல்ல எண்ணங்களைக் கொடு

நல்ல எண்ணங்களைக் கொடு

ADDED : டிச 20, 2008 09:55 AM


Google News
Latest Tamil News
<P>கண்களை இமைக்காமல் செந்நிறமான மெல்லிய இதழ்களை உடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பெண்ணாகிய திருமகளின் கண்களை நோக்கிடும் கோவிந்தனே! தன்னை நெருங்கி வரும் அன்பர்களுக்கு பொற்பாதங்களை தந்தருளும் சராசரத்து நாதனே! எளியவனாகிய நான் தினமும் இரண்டுகோடிக்கும் அதிகமான வீண்கவலைகளால் வருந்துகிறேன். எளியவனின் கவலைகளை எப்போது போக்கிடுவாய்? இறைவனே! காற்றில், பறவையில், மரத்தில், மேகத்தில், வரம்பில்லாத வானவெளியில், கடலில், மண்ணில், வீதியில், வீட்டில் என்று காணும் இடத்தில் எல்லாம் உன்னைக் காண்கிறேன். கோவிந்தனே! உன்னோடு நான் கலந்து இன்பம் காண வேண்டும்.பெருமாளே! என் இரு கண்களையும் மறந்து, உன் இரு கண்களை என் மனத்தில் இசைத்துக் கொண்டு வாழ வேண்டும். உன் கண்களால் இப்பூமி முழுவதும் உன் வடிவத்தையே நான் காண வேண்டும். கோவிந்தனே! மனதில் தோன்றும் தீய எண்ணங்கள், மறதி, சோம்பல், பாவங்கள் எல்லாம் அடியோடு என்னை விட்டு நீங்க வேண்டும். நெஞ்சில் உள்ள கெட்ட எண்ணங்கள் என்னை விட்டு அகன்று, ஆனந்த அமுதமாகிய நன்மைகளை புகட்டி அருள்வாய்.<BR></P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us