Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/முடியாது என சொல்லாதே!

முடியாது என சொல்லாதே!

முடியாது என சொல்லாதே!

முடியாது என சொல்லாதே!

ADDED : நவ 18, 2013 11:11 AM


Google News
Latest Tamil News
* தன் குற்றத்தை சுண்டைக்காய் போலவும், மற்றவர்களின் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைக்கக் கூடாது.

* செய்த குற்றத்தை பிறர் அறியாமல் மறைப்பதும், மறப்பதும், பொய் காரணம் கூறி குற்றத்திற்கு நான் காரணமல்ல என்று உரைப்பதும் முட்டாள்களின் செயல்.

* குற்றம் செய்தவனை சீர்திருத்தி, வருங்காலத்தில் குற்றம் செய்யாதபடி மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்.

* குற்றமில்லாதவர்களிடம் மட்டுமே, பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம் இருக்கும்.

* அன்பும், தர்மசிந்தனையும் கொடியவர்களைக்கூட மாற்றி விடும்.

* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவனுக்கு பிறரைத் திருத்துவதற்கு அதிகாரம் இல்லை.

* நம்மால் முடியாது என்று எதையும் விட்டுவிடக் கூடாது. திறமை பெற்றவனின் உதவியோடு எதையும் கற்றுக் கொள்ள முயல வேண்டும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us