Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/இன்பம் தரும் சொல்

இன்பம் தரும் சொல்

இன்பம் தரும் சொல்

இன்பம் தரும் சொல்

ADDED : ஆக 20, 2013 05:08 PM


Google News
Latest Tamil News
* விதியின் முடிவுகளை வெல்லும் சக்தி பக்திக்கு உண்டு. இந்த உலகின் தலைவனான கடவுள் பக்திக்கு வசப்படுவான். அதனால், பக்தன் எது கேட்டாலும் கைகூடும்.

* அன்பு வெறும் கொள்கையாக, பேச்சளவில் இருப்பது போதாது. செயலில் வெளிப்படுவதே பயன் அளிக்கும்.

* பூச்சி, நோய் போன்றவற்றால் மனிதனுக்கு அழிவு நேராது. கவலை, பயத்தால் தான் மனிதர்கள் சாகிறார்கள்.

* ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு தான். செல்வந்தர்கள் செய்யும் அநியாயம் அதிகமே.

* தர்மம், கருணை போன்ற நற்பண்புகளால் உண்டாகும் வெற்றியே உலகில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

* 'எல்லாம் அளிக்கும் கடவுள் நம்மையும் காப்பார்' என்று, நம்பிக்கையுடன் சொல்லுங்கள். துன்பம் நீங்கி இன்பம் பிறக்கும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us