ADDED : செப் 08, 2017 09:27 AM

திருப்பதி ஏழுமலையானுக்கு கோயில் கட்டிய மன்னர் தொண்டைமான் சக்கரவர்த்தி. இவர் தினமும் பெருமாளை தங்க தாமரை மலர்களால் வழிபட்டு வந்தார். ஒருநாள் பெருமாள் முன், மண் மலர்கள் சிதறிக் கிடக்க கண்டார். இதற்கு காரணமானவர் யார் என்பதை பெருமாளிடம் கேட்டார். ''பீமன் என்னும் குயவனே இதற்கு காரணம். சனிக்கிழமை விரதமிருக்கும் அவன், தினமும் பணியைத் தொடங்கும் முன், மண் மலர்களால் எனக்கு அர்ச்சனை செய்வான். அவனுடைய பக்தியை உலகறியச் செய்ய இந்த மண் மலர்களையும் ஏற்று அருள்புரிந்தேன்'' என அசரீரி கேட்டது. பணத்தை விட பக்தியே அவசியம் என்பதை இந்த சம்பவம் மூலம் ஏழுமலையான் உணர்த்தினார். இந்த புரட்டாசி சனி நாளில் விரதமிருந்து திருப்பதி பெருமாளை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.