Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/பிள்ளை "யார்' என்பது ஏன்?

பிள்ளை "யார்' என்பது ஏன்?

பிள்ளை "யார்' என்பது ஏன்?

பிள்ளை "யார்' என்பது ஏன்?

ADDED : ஆக 26, 2011 09:28 AM


Google News
Latest Tamil News
பரமேஸ்வரனின் பிள்ளை, பார்வதியின் பிள்ளை என்றாலே அவர் விநாயகர் என்று தெரியும். ஆனால், இவரை பிள்ளை 'யார்' என்று 'யார்' என்ற மரியாதைச் சொல் சேர்த்து அழைக்கிறோம். தந்தையை 'தந்தையார்' என்றும், தாயை 'தாயார்' என்றும், தமையனை 'தமையனார்' என்றும், அண்ணியை 'அண்ணியார்' என்றெல்லாம் மரியாதையுடன் அழைக்கலாம். ஆனால், நம் வீட்டுப் பிள்ளைகளை 'பிள்ளையார்' என்று அழைப்பதில்லை. அந்த மரியாதை, விநாயகருக்கு மட்டுமே தரப்படுகிறது. காரணம் அவர் பார்வதி, பரமேஸ்வரன் என்ற பெரிய வீட்டுக்காரர்களின் பிள்ளை மட்டுமல்ல. தனக்கு மேல் கருணை, பலம், புத்திக்கூர்மை, காரியசக்தி, அன்புள்ளம் கொண்டவர் எவருமில்லை என்று தனது அருளின் மூலம் நிரூபிப்பதால், 'பிள்ளையார்' என பெருமையுடன் போற்றப்படுகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us