Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/வெள்ளைப்புடவை ரகசியம்

வெள்ளைப்புடவை ரகசியம்

வெள்ளைப்புடவை ரகசியம்

வெள்ளைப்புடவை ரகசியம்

ADDED : செப் 22, 2017 10:00 AM


Google News
Latest Tamil News
சரஸ்வதிக்குரிய வாகனம் அன்னம். மகாராஷ்டிர மாநிலம், நாசிக் அருகிலுள்ள திரியம்பக் (ஜோதிர்லிங்க தலம்) மியூசியத்தில், சரஸ்வதி தேவி அன்னத்தில் அமர்ந்த சிற்பம் உள்ளது. அன்னம் வெள்ளை நிறம் கொண்டது. சரஸ்வதியும் வெள்ளைப் புடவை அணிவாள். நாம் கற்கும் கல்வி மாசு மருவற்றதாக இருக்க வேண்டும்.

படித்தவர்கள் வெள்ளை உள்ளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. இந்த சரஸ்வதிக்கு நான்கு கரங்கள் உள்ளன.

பின் கரங்களில் ஜபமாலையும், சுவடியும் உள்ளது. முன் கரங்களில் வீணை ஏந்தியிருக்கிறாள். கீழ் பகுதியில் இரண்டு சேவகர்கள் வெண் சாமரம்

வீசுவது போல வடிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us