ADDED : நவ 03, 2023 11:37 AM

அலமேலு மங்காபுரம் அல்லது திருச்சானுார் என்னும் ஊர் திருப்பதியில் இருந்து நான்கு கி.மீ., துாரத்தில் உள்ளது.
இங்கு பத்மாவதி தாயார் தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறாள். வைகுண்டத்தில் பெருமாளின் திருமார்பில் வசிக்கும் மகாலட்சுமியே இங்கு பத்மாவதிதாயாராக காட்சி தருகிறார். கோயிலை ஒட்டியுள்ள குளத்திற்கு 'பத்மஸரோவ தீர்த்தம்' என்று பெயர். பெருமாளின் வேண்டுகோள்படி உலக மக்களின் நலத்திற்காக இக்குளத்தில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மீது மகாலட்சுமி தோன்றினாள். பின் குளக்கரையில் கோயில் கட்டப்பட்டு அங்கு குடியேறினாள்.
திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்கும்முன் இந்த தாயாரை தரிசிப்பது சிறப்பு. பக்தர்களது வாழ்வில் நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும் தலங்களில் ஒன்று திருச்சானுார்.