ADDED : செப் 30, 2020 06:16 PM

ஏழுமலையானின் பக்தையான வேங்கமாம்பா, பெற்றோரின் வற்புறுத்தலால் வெங்கடாஜலபதி என்பவரை திருமணம் செய்தார். குடும்ப வாழ்வில் ஈடுபாடு இல்லாததால் துறவறம் பூண்டு ஏழுமலை மீதுள்ள தும்புரு தீர்த்தக்கரையில் வாழ்ந்து அங்கேயே சமாதியானார். இவரது சமாதி திருப்பதியில் வடக்கு வீதியில் உள்ளது. திருப்பதி உற்ஸவர் போகசீனிவாசருக்கு முத்து மாலை ஒன்றை தானமாக கொடுத்துள்ளார். வெங்கடேச மகாத்மியம், தத்வ கீர்த்தனம், கிருஷ்ண மஞ்சரி, நரசிம்ம விலாசம், பாலகிருஷ்ண நாடகம் இவரால் பாடப்பட்டவை.