ADDED : ஜன 08, 2021 05:27 PM

சூரியனின் இயக்கத்தைக் கொண்டே உலக இயக்கம் நடக்கிறது. அதிகாலையில் விழித்து அன்றாடக் கடமைகளைச் செய்ய வேண்டும். மனிதர் மட்டுமின்றி விலங்குகள், பறவைகள், தாவரங்களும் சூரிய ஒளியில் உணவு தேடுகின்றன. ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பது சூரியன். இதனடிப்படையில் தான் வாரத்தின் முதல்நாளாக சூரியனுக்குரிய ஞாயிறு உள்ளது. முதல் காப்பியமான சிலப்பதிகாரம் “ஞாயிறு போற்றுதும்” என சூரியனை போற்றுகிறது.