Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/மதுரை வந்த ஸ்ரீரங்கம் பெருமாள்

மதுரை வந்த ஸ்ரீரங்கம் பெருமாள்

மதுரை வந்த ஸ்ரீரங்கம் பெருமாள்

மதுரை வந்த ஸ்ரீரங்கம் பெருமாள்

ADDED : செப் 16, 2011 12:51 PM


Google News
Latest Tamil News
அந்நியர் படையெடுப்பின் போது மதுரை அருகிலுள்ள யானைமலை கொடிக்குளத்தில் ஸ்ரீரங்கம் உற்சவர் நம்பெருமாள் சிலை (வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் வழியே வருபவர்) பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டிருந்தது. பிள்ளைலோகாச்சாரியார் என்ற மகான் பாதுகாப்பு பணிகளைச் செய்தார். இவ்வூரிலேயே அவர் உயிர் துறந்தார். அவருடைய திருவரசு (நினைவிடம்) இங்கு உள்ளது. வடமொழியில் இவ்வூரை 'ஜோதிஷ்குடி' என்பர். இங்கு பிரம்மா வழிபட்ட வேதநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. நம்பெருமாள் சிலை இருந்த இடத்தில், அடையாளமாக ஒரு பாதம் இருக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us