Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/விடை தெரியாத ஆறு கேள்விகள்

விடை தெரியாத ஆறு கேள்விகள்

விடை தெரியாத ஆறு கேள்விகள்

விடை தெரியாத ஆறு கேள்விகள்

ADDED : டிச 17, 2020 05:26 PM


Google News
Latest Tamil News
1. கெட்ட பழக்கமே இல்லாதவர் திடீரென மரணம் அடைவது ஏன்

2. யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என நினைப்பவர் அதிகம் காயப்படுவது ஏன்

3. உறவினர், நண்பர்களை அதிகம் நேசிப்பவர் தனிமையில் வாடுவது ஏன்

4. இளகிய மனதுடன் பிறருக்கு உதவுபவர் ஏமாற்றப்படுவது ஏன்

5. வீண் செலவு செய்யாத சிலர் பொருளாதாரத்தில் நலிவது ஏன்

6. ஆணவம், அலட்சிய எண்ணம் கொண்ட சிலர் பணத்தில் திளைப்பது ஏன்

இதற்கெல்லாம் ஒரே விடை முற்பிறவியில் செய்த வினைப்பயன். அதாவது பிராப்த கர்மா. இது சாதாரண மனிதர்களுக்கு பொருந்தும். தன்னைச் சரணடைந்து மோட்சத்தை எதிர்பார்க்கும் ஞானிகளின் கர்மாவை கடவுள் கழித்துக் கொடுக்கிறார்.

அடுத்தடுத்த பிறவிக்கான கர்மாவையும் இப்பிறவியிலேயே கழித்து விட்டு தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார். இதனால் சரணாகதி அடைந்தவர்கள் அதிகம் துன்பப்படுவது போல தோன்றலாம். அதுவும் கடவுள் கருணையே.

ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப் பதக்கம் பெறுவதற்காக வீரர்கள் வாழ்வில் எத்தனை தியாகம் செய்கிறார்கள்?

இதன் மதிப்பு வெறும் நான்கு ஆண்டுகள் தான். அதன் பின் உலகம் மறந்து விடும். இதற்கே படாத பாடு என்றால் நிரந்தர இன்பமான மோட்சம் பெற ஏன் மனிதன் துன்பப்படக்கூடாது.

இந்த கண்ணோட்டத்தில் தான் பகவத்கீதையில், 'சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிப்பாய்' என்கிறார் பகவான் கிருஷ்ணர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us