ADDED : செப் 22, 2017 10:07 AM

நவராத்திரியில் நவமியன்று சரஸ்வதி பூஜை நடத்துவர். ஆனாலும், சரஸ்வதியின் ஜென்ம நட்சத்திரமான மூலத்தில் தொடங்கி, பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களிலும் சரஸ்வதியை வழிபட வேண்டும் என்றும் பூஜாவிதி முறை கூறுகிறது. திருவாவடுதுறை ஆதீனத்தில், புரட்டாசி மாத மூல நட்சத்திரத்தன்று, ஏட்டுச்சுவடிகளில் சரஸ்வதியை எழுந்தருளச் செய்யும் வழக்கம் இன்றும் பின்பற்றப்படுகிறது.