ADDED : ஜன 08, 2021 05:30 PM

தைமாத வளர்பிறை சப்தமியை ரதசப்தமியாக கொண்டாடுகிறோம். இந்நாளில் சூரியனின் ரதம் மேற்கு நோக்கி நகரும். அன்று பெண்கள் ஏழு எருக்க இலைகளையும், சிறிது அட்சதையையும், ஆண்கள் ஏழு எருக்க இலைகளையும், சிறிது அரிசியையும் தலையில் வைத்து நீராட வேண்டும். சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல், வடை நைவேத்தியம் செய்து வழிபட, உடல்நலம், செல்வ வளம் பெருகும்.