ADDED : செப் 08, 2017 09:24 AM

உபதேசம் பெற வந்த ராமானுஜர், திருக்கோஷ்டியூர் நம்பியின் வீட்டின் முன் நின்று அழைத்தார். நம்பி, 'யார் நீ ?' என கேட்க, 'நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,” என்றார். வீட்டுக்குள் இருந்தபடியே நம்பி, 'நான் செத்து வா!' என்றார். புரியாத ராமானுஜரும் புறப்பட்டார். இப்படி 17 முறை வந்தும், இதே பதில் கிடைத்தது. கடைசியாக ராமானுஜர், 'நான்' என்று சொல்லாமல் பணிவுடன், 'அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன்' என்றார்.
இப்படி சொன்னதும் சீடனாக ஏற்று 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை உபதேசித்தார். 'யாரிடமும் இதை சொல்லக் கூடாது என்றும், மீறினால் நரகம் கிடைக்கும்' என்றும் எச்சரித்தார். ஆனால் ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோயில் விமானத்தின் மீதேறி ஊரறிய, சத்தமாக மந்திரத்தை சொன்னார். கோபம் கொண்ட நம்பியிடம் ராமானுஜர், 'நான் ஒருவன் நரகம் போனாலும், ஊரார் நன்மை பெற்றால் போதும்'' என்றார். ஊருக்கு உபதேசித்த உத்தமர் ராமானுஜரிடம் 'நீயே என்னிலும் பெரியவர்' என்று நம்பி பாராட்டினார். திருக்கோஷ்டியூர் விமானத்தில் ராமானுஜர் சிலை உள்ளது. எதிரில் 'கல் திருமாளிகை' எனப்படும் திருக்கோஷ்டியூர் நம்பியின் வீடும் உள்ளது.