Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/கிரக தோஷம் போக்குபவர்

கிரக தோஷம் போக்குபவர்

கிரக தோஷம் போக்குபவர்

கிரக தோஷம் போக்குபவர்

ADDED : ஜன 22, 2021 02:30 PM


Google News
Latest Tamil News
அஸ்வமேத யாகம் நடத்திய மகாபலி சக்கரவர்த்தியிடம் தானம் பெற, மகாவிஷ்ணுவே குள்ள வடிவில் வாமனராக எழுந்தருளினார். தன் காலால் அளந்தபடி மூன்று அடி நிலத்தை தானமாக கேட்ட வாமனர், மகாபலியின் ஆணவத்தைப் போக்க உலகளந்தபெருமாளாக உருவெடுத்தார். வந்திருப்பவர் மகாவிஷ்ணு என்பதை உணர்ந்த மகாபலி, அவரின் திருவடியில் சரணடைந்தான். அவனுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்த வாமனர், சிரஞ்சீவியாக வாழும் பாக்கியத்தை வழங்கினார். வேதாந்த தேசிகனால் இயற்றப்பட்ட தசாவதார ஸ்தோத்திரம், குருவுக்குரிய அதிபதியாக வாமன மூர்த்தியைக் குறிப்பிடுகிறது. இவரை மனதில் தியானித்து, 'ஓம் ஸ்ரீவாமன மூர்த்தியே நமஹ' என்று 108 முறை தினமும் ஜபித்தால் கிரகதோஷம் நீங்கும். வாழ்வில் வளம் கொழிக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us