Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/அனுமன் பிறக்கவும் பாயாசம்

அனுமன் பிறக்கவும் பாயாசம்

அனுமன் பிறக்கவும் பாயாசம்

அனுமன் பிறக்கவும் பாயாசம்

ADDED : ஜூன் 24, 2011 02:59 PM


Google News
Latest Tamil News
சத்ரபதி வீரசிவாஜியின் குரு சமர்த்த ராமதாசர். ஆஞ்சநேய பக்தரான இவர், தன் அதீதபக்தியால் ராமனின் பிறப்போடு அனுமனின் பிறப்பையும் இணைத்து விட்டார். தசரத சக்கரவர்த்தி புத்திர காமேஷ்டியாகம் நடத்திய போது, கிடைத்த தெய்வீகப் பாயசத்தை தன் மனைவியரான கோசலை, கைகேயி, சுமித்ரை ஆகிய மூவருக்கும் கொடுத்தார். அதைக் குடித்த அவர்கள் ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் ஆகிய குழந்தைகளைப் பெற்றனர். லட்சுமண, சத்ருக்கனரின் தாயான சுமித்ரா அருந்திய பாயாசத்தில் ஒருபங்கை வாயு தேவன் எடுத்துச் சென்று அஞ்சனாதேவிக்கு வழங்கினார். அதைப் பருகிய அவள், ராமனுக்கு ஈடான அனுமனைப் பெற்று மகிழ்ந்தாள் என்கிறார் இவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us