Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/பணப்பிரச்னை தீர

பணப்பிரச்னை தீர

பணப்பிரச்னை தீர

பணப்பிரச்னை தீர

ADDED : ஜூலை 12, 2024 09:23 AM


Google News
தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்த போது, தேவேந்திரன் சீதனமாக பொன்னும் பொருளும் பரிசளித்தார்.

அதில் தேவலோகத்திலுள்ள ஐராவதம் என்னும் வெள்ளை யானையும் இடம் பெற்றிருந்தது.

இதன் பின் இந்திரனின் செல்வச் செழிப்பு குறைய ஆரம்பித்தது. செல்வத்தின் அடையாளமான ஐராவதம், தன்னை விட்டுப் பிரிந்ததே இதற்கு காரணம் என்பதை உணர்ந்த இந்திரன், தன் மருமகன் முருகனிடம் ஆலோசித்து, யானையை தேவலோகம் இருக்கும் கிழக்கு திசை நோக்கி இருக்கச் செய்தார். அதன் பின் இந்திரனின் செல்வ வளம் அதிகரித்தது.

இதனடிப்படையில் திருத்தணியில் வாகனமான யானை கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதை தரிசிக்க பணப்பிரச்னை நீங்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us