Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/அம்மாவுக்கு குழந்தை மனசு

அம்மாவுக்கு குழந்தை மனசு

அம்மாவுக்கு குழந்தை மனசு

அம்மாவுக்கு குழந்தை மனசு

ADDED : செப் 15, 2017 01:43 PM


Google News
Latest Tamil News
காத்யாயன மகரிஷி பார்வதியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று விரும்பி நீண்டகாலம் தவம் புரிந்தார்.

பார்வதியும் அவரின் மகளாகப் பிறந்தாள். இதனால் 'காத்யாயனி' என பெயர் பெற்றாள். அம்பிகை குழந்தையாக அவதரித்ததில் விசேஷ தத்துவம் அடங்கியிருக்கிறது. எந்த உணர்ச்சியும் குழந்தை மனதில் தங்கியிருக்காது. சிரிப்பு, கோபம், அழுகை, அடம்பிடித்தல் என்று எல்லாம் அந்தந்த நேரத்தோடு ஓடி விடும். உலக மாதாவான அம்பிகை, குழந்தையின் சிறப்பை உணர்த்தவே காத்யாயனியாகப் பிறந்தாள். அவளை வழிபட்டால் நமக்கும் குழந்தை மனசு உண்டாகும். துர்காதேவியை காயத்ரி மந்திரம் 'காத்யாயனி' என்றே குறிப்பிடுகிறது. அசுரர்களை அழிப்பதில் கோபக்காரி என்றாலும், பக்தர்களை காப்பதில் குழந்தை மனம் கொண்டவள் என்பதையே இது காட்டுகிறது




      Our Apps Available On




      Dinamalar

      Follow us