ADDED : மார் 05, 2021 05:35 PM

மாசியை 'கடலாடும் மாதம், தீர்த்தமாடும் மாதம்' என்று சொல்வர். கும்ப ராசியில் சூரியனும், சிம்ம ராசியில் சந்திரனும் சஞ்சாரம் செய்யும் மாசிமக நாளில் பவுர்ணமியும் சேர்ந்திருக்கும். இந்நாளில் புனித தீர்த்தங்களில் நீராடி, கடவுளை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். கும்பகோணம், ராமேஸ்வரம், திருச்செந்துார் போன்ற திருத்தலங்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் இதை 'கும்பமேளா' என்பர். மாசி மகத்தன்று ஒருவேளையாவது விரதம் இருந்தால் பாவம் பறந்தோடும். திருமணத்தடை, குழந்தையின்மை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.