ADDED : அக் 14, 2020 08:52 AM

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் தலம் மதுரை அழகர்கோவில். இங்கு மலை மீது நுாபுர கங்கை தீர்த்த மண்டபத்தின் காவல் தெய்வம் ராக்காயி அம்மன். ஆங்கிரஸ முனிவரின் மகளாக இவள் கருதப்படுகிறாள். அமாவாசையன்று நுாபுர கங்கையில் நீராடி, ராக்காயி அம்மனை வழிபட்டால் முன்னோர் சாபம் நீங்கும். மல்லிகை கொடிகள் அடர்ந்த பகுதியாக இருந்ததால் இந்த மண்டபத்தை 'மாதவி மண்டபம்' என அழைக்கின்றனர்.