Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/பரிகாரம் செய்யுங்கள்! பலனை பெறுங்க!

பரிகாரம் செய்யுங்கள்! பலனை பெறுங்க!

பரிகாரம் செய்யுங்கள்! பலனை பெறுங்க!

பரிகாரம் செய்யுங்கள்! பலனை பெறுங்க!

ADDED : ஜூலை 15, 2011 11:24 AM


Google News
Latest Tamil News
பொறாமைக்காரர்களால் தொல்லையா?

வீட்டிலோ, பணியிடத்திலோ, தொழிலிலோ, உறவிலோ நாம் அறிந்தோ அறியாமலோ பொறாமைக்காரர்கள் முளைத்து விடுகின்றனர். காலப்போக்கில் இவர்கள் எதிரிகளாகக் கூட மாறி விடுகின்றனர்.

''நான் யாருக்கும் ஒரு கெடுதலும் நினைக்கலே! ஏன் எனக்கு மட்டும் எதிரிகள் முளைக்கிறார்கள்!'' என்று சொல்லி வருத்தப்படுவர்கள் ஏராளம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர் வழிபாடு உகந்தது. சனிக்கிழமைகளில் 12 முறை சக்கரத்தாழ்வார் சந்நிதியை வலம் வந்து வணங்கலாம். துளசிமாலை சாத்தி, கல்கண்டு பிரசாதத்தை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு கொடுங்கள். யோகநரசிம்மர் படத்தை கிழக்கு முகமாக வைத்து மாலையில் தீபமேற்றுங்கள். ''யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே'' என்று 108 முறை உள்ளம் உருகிச் சொல்லுங்கள். பொறாமைக்காரர்களின் துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவீர்கள்.

புத்திரதோஷம் போக்கும் அற்புத மந்திரம்

குழந்தை வரம் தரும் வரப்பிரசாதியாகத் திகழ்பவர் முருகப்பெருமான். மாதம் தோறும் வளர்பிறை சஷ்டிநாளில் விரதம் இருந்து, அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வரவேண் டும். காலை அல்லது மாலை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது அவசியம். ஆறெழுத்து மந்திரமான 'ஓம் சரவணபவ' என்பதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜபிக்கலாம். விபூதியை ஒரு தட்டில் பரப்பிக் கொள்ளுங்கள். முருகப்பெருமானை மனதில் தியானித்து 'ஓம் சரவணபவ' என்று ஆள்காட்டிவிரலால் எழுதிக் கொள்ளவேண்டும். அந்த விபூதியை தொடர்ந்து பூசிவாருங்கள். குழந்தை பிறந்தவுடன் ஆண்குழந்தையானால் முருகன் பெயரையோ, பெண் குழந்தையானால் வள்ளி, தெய்வானை என்றோ பெயரிடுவதாக நேர்ந்து கொள்ளுங்கள். முருகன் அருளால் கூடிய சீக்கிரம் வீட்டில் மழலைச் செல்வம் தவழ்ந்து விளையாடும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us