Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/மனசு குளிரட்டும்

மனசு குளிரட்டும்

மனசு குளிரட்டும்

மனசு குளிரட்டும்

ADDED : ஜூலை 31, 2011 01:05 PM


Google News
Latest Tamil News
வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதே, பிறருக்கெல்லாம் உபகாரம் செய்வதற்காகத்தான். நிறைய சம்பாதித்து அதையெல்லாம் நமக்காகவே செலவழித்துக் கொண்டால் சுவாமி சந்தோஷப்படமாட்டார். அவருக்கு நாம் எப்படி குழந்தைகளோ அதே மாதிரி ஏழைகள், நோயாளிகள், அனாதைகள் எல்லாருமே குழந்தைகள் தான். அந்தக் குழந்தைகளுக்கு நாம் உபகாரம் பண்ணாமல், நமக்கே செலவழித்துக் கொண்டால் சுவாமி அதற்குப்பிறகு நமக்கு அருள் செய்யமாட்டார்.

அதனால், எல்லோரும் உலகத்துக்கு முடிந்த உபகாரத்தைச் செய்ய வேண்டும். அதில் பெரிய சந்தோஷமும், திருப்தியும் உண்டாகும். நீங்களே உங்கள் சம்பாத்தியத்தைச் சாப்பிடுவதைவிட, ஓர் ஏழைக்குச் சாப்பாடு போட்டால் அதில் இன்னும் ஜாஸ்தி இன்பம் உண்டாகும். நாம் இங்கு பிறந்திருப்பதே மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான். நீங்கள் மற்றவர்களின் மனதைக் குளிர வைத்தால் அதைப் பார்த்து சுவாமியும் உங்களிடம் மனம் குளிர்ந்து நிரம்ப அருள் செய்வார்.

அதனால் இன்றிலிருந்து தினமும் காலை, மாலை இரண்டுவேளையும் ஐந்து நிமிஷமாவது சுவாமியை அம்மையப்பராக நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். ''எனக்கு நல்ல புத்தி தா!'' என்று வேண்டிக் கொள்ளுங்கள். இதனால், நல்லமனம், உறுதியான புத்தி, உயர்கல்வி, உத்தியோகம், பிறர் எல்லாருக்கும் உபகாரமான நல்ல வாழ்க்கை எல்லாம் உங்களுக்கு ஏற்படட்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us