Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/கடவுள் இருக்கின்றார் கண்ணுக்குத் தெரிகின்றதா?

கடவுள் இருக்கின்றார் கண்ணுக்குத் தெரிகின்றதா?

கடவுள் இருக்கின்றார் கண்ணுக்குத் தெரிகின்றதா?

கடவுள் இருக்கின்றார் கண்ணுக்குத் தெரிகின்றதா?

ADDED : ஜூலை 15, 2011 11:11 AM


Google News
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை ஒரு அரண்மனையில் எழுந்தது. மன்னன் அவையோரிடம், ''கடவுள் இருக்குமிடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னால் என்னிடமுள்ள இந்த அரியவகை மாம்பழத்தைத் தருவேன்,'' என்று அறிவித்தான். அவையில் இருந்தவர்கள் சூரியமண்டலம், சந்திரமண்டலம், தேவலோகம், வைகுண்டம், கைலாயம் என்றெல்லாம் ஆய்வு செய்து பேசினார்கள். இதை அமைச்சரின் மகளான சிறுமி கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

''அரசே! கடவுள் இருக்குமிடத்தைக் காட்டினால் ஒரு பழம் தருவதாக அறிவித்தீர்கள். அவர் எல்லாப் பொருள்களிலும் இருக்கிறார். அவர் இல்லாத இடத்தை நீங்கள் காட்டுங்கள், நான் 12 மாம்பழங்களை உங்களுக்குத் தருகிறேன்,'' என்றாள். மன்னர் மட்டுமல்ல, அவையே அடங்கி விட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us