Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/சிவன் கோயிலின் காவலன்

சிவன் கோயிலின் காவலன்

சிவன் கோயிலின் காவலன்

சிவன் கோயிலின் காவலன்

ADDED : ஜன 22, 2021 02:28 PM


Google News
சாகாவரம் பெற்ற தானகாசுரன் தேவர்களைத் துன்புறுத்தினான். அசுரனை அழித்து, தேவர்களைக் காக்கும் பொறுப்பை சிவன் காளியிடம் ஒப்படைத்தார். கோர வடிவெடுத்த காளி, அசுரனைக் கொன்றாள். ஆனாலும் அவளின் ஆவேசம் தீரவில்லை. உயிர்கள் அனைத்தும் காளியைக் கண்டு அஞ்சின. அப்போது சிவன் கட்டளைப்படி, மாய பாலகன் ஒருவன் காளியின் முன் குழந்தை வடிவில் பசியால் அழத் தொடங்கினான். அதைக் கேட்ட காளி தாய்மை உணர்வுடன் பாலுாட்டினாள். பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்துக் குடித்தது அக்குழந்தை. அதன் பின் காளி சாந்தமானாள். அக்குழந்தையே வளர்ந்து 'க்ஷேத்திர பாலகர்' என பெயர் பெற்றார். இதற்கு 'கோயிலைக் காப்பவர்' என்பது பொருள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us