ADDED : செப் 08, 2017 09:22 AM

திவ்யதேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். சூரிய வம்சத்தின் குல தெய்வமான ரங்கநாதரின் சிலையை ராமபிரான், விபீஷணனிடம் கொடுத்து அனுப்ப, அதை இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில், இங்கே வைத்து விட்டான். திரும்ப அவனால் எடுக்க முடியவில்லை. பிற்காலத்தில் அந்த இடத்தில் மிகப்பெரிய கோயில் உருவானது.