ADDED : ஆக 19, 2011 01:37 PM
கண்ணன் செய்த லீலைகள் கணக்கில் அடங்காது. வெண்ணெய் உண்டது, தயிரைத் திருடியது, பூதனையைக் கொன்றது, கன்று மேய்த்தது, காளிங்க நர்த்தனம் செய்தது, உரலில் கட்டுண்டது, மரங்களை முறித்தது, பிருந்தாவனத்தில் கோபியரோடு ஆடியது, ஹம்சனை வதம் செய்தது என்று எத்தனையோ லீலைகளை விளையாட்டாகச் செய்து முடித்தார். இதனை கண்ணன் பாட்டில், ''தீராத விளையாட்டுப்பிள்ளை! கண்ணன் தெருவில் இருப்போருக்கு ஓயாத தொல்லை!'' என்று பாரதியார் நகைச்சுவையுணர்வோடு பாடியிருக்கிறார். ஆழ்வார்கள், பாகவதர்கள் கண்ணனின் லீலைகளில் மனம் ஈடுபட்டு அனுபவித்துப் பாடியுள்ளார். வேதமும் இறைவனை, ''ரஸோ வைஸா'' என்று வர்ணிக்கிறது. 'பகவானை விட சிறந்த ரசனை உள்ளவன் வேறில்லை' என்பது இதன் பொருள்.
குறிப்பாக, கோகுலத்தில் கண்ணன் நிகழ்த்திய விளையாடல்களுக்கு 'ரஸோவைஸா' என்ற பெயர் பொருத்தமாக இருப்பதாகச் சொல்வர்.
குறிப்பாக, கோகுலத்தில் கண்ணன் நிகழ்த்திய விளையாடல்களுக்கு 'ரஸோவைஸா' என்ற பெயர் பொருத்தமாக இருப்பதாகச் சொல்வர்.