Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/குழந்தை இல்லையா? தொட்டமளூர் வாங்க!

குழந்தை இல்லையா? தொட்டமளூர் வாங்க!

குழந்தை இல்லையா? தொட்டமளூர் வாங்க!

குழந்தை இல்லையா? தொட்டமளூர் வாங்க!

ADDED : அக் 13, 2017 11:33 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு - மைசூரு சாலையில் சென்னப்பட்டினா அருகே தொட்டமளூர் அப்ரமேயர் கோயிலில் நவநீதகிருஷ்ணர் சன்னதி புகழ் பெற்றது. வேதங்களைத் தந்த வியாசரால் பிரதிஷ்டை செசய்யப்பட்ட மூர்த்தி இவர். சங்கீத பிதாமகரான புரந்தரதாசர் இங்கு வரும்போது, நண்பகல் வேளையானதால் நடையைப் பூட்டி விட்டனர். கண்ணனைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலினால் “ஜகத்தோத்தாரணா” என்னும் புகழ் மிக்க கீர்த்தனையைப் பாடினார். ஆலயத்தின் கதவுகள் திறந்தன.

பரம தயாளனான கண்ணன், குழந்தை வடிவில் தவழ்ந்து அருள் செய்தான். புரந்தரதாசர் கண்ட தரிசனத்தை இன்றும் நாம் காணலாம். மரத்திலான தொட்டில்கள் இக்கோயிலில் கிடைக்கின்றன. குழந்தை பிறந்த பின், குழந்தையோடு வந்து மரத்தொட்டில் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தை இல்லாதவர்கள் புரட்டாசி சனியன்று தரிசிப்பது சிறப்பு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us