Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/"சூசி'க்கு விடை தெரியுமா?

"சூசி'க்கு விடை தெரியுமா?

"சூசி'க்கு விடை தெரியுமா?

"சூசி'க்கு விடை தெரியுமா?

ADDED : ஜூன் 10, 2011 09:21 AM


Google News
Latest Tamil News
ராஜேந்திரச் சோழனால் கட்டப்பட்ட சிவாலயம், அரியலூர் அருகிலுள்ள கங்கை கொண்ட சோழபுரமாகும். இங்குள்ள சரஸ்வதி 'ஞானசரஸ்வதி'யாக போற்றப்படுகிறாள். ஜடாமகுடத்துடன் அட்சமாலை, கமண்டலம், சுவடி ஆகியவற்றை ஏந்தி நிற்கும் இவள், சூசி ஹஸ்தத்துடன் காட்சிதருகிறாள். ஆள்காட்டி விரலைத் தவிர மற்ற விரல்களை வளைத்து மடக்கி இருக்கும் நிலைக்கு 'சூசிஹஸ்தம்' என்று பெயர். 'நமக்கு மேலான இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற ஞானத்தோடு மனிதன் வாழவேண்டும்' என்பது இம்முத்திரையின் பொருள். தாமரை மலரில் அர்த்த பத்மாசன நிலையில் அமர்ந்திருக்கும் ஞானசரஸ்வதியை வழிபட பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us