Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம்

கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம்

கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம்

கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம்

ADDED : ஆக 05, 2011 12:14 PM


Google News
Latest Tamil News
வானத்தில் வட்டமிடும் கருடனைக் கண்டதும் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று கன்னத்தில் போட்டு வணங்குவது வழக்கம். கருடதரிசனத்தை புண்ணியம் மிக்கதாகவும், நல்ல சகுனத்தின் அடையாளமாகவும் கருதுவர். கருடனின் குரலைக் கேட்டாலும் நல்ல சகுனம் தான்.

'கருடதர்சனம் புண்யம் ததோபித்வனிருச்யமாதோ' என்று ஒரு ஸ்லோகம் உண்டு. அதன் குரல் சாமவேதம் ஓதுவதைப் போல இருக்கும். பறவை இனத்தின் தலைவனாக இருப்பதால் 'பட்சிராஜன்' என்ற சிறப்பு பெயர் இதற்குண்டு.

தட்சனின் மகளான வினதைக்கு பிறந்த பிள்ளை என்பதால் 'வைநதேயன்' என்ற பெயரும் ஏற்பட்டது. திருமாலுக்கு வைகுண்டத்தில் தொண்டு செய்பவர்களில் கருடாழ்வாரே முதன்மையானவர். கருடனை உபாசித்து, ஆச்சாரியர் சுவாமிதேசிகன், ஹயக்ரீவ மந்திரத்தைப் பெற்றதாகக் கூறுவர். அவர் இயற்றிய கருடதண்டகம், கருட பஞ்சாஷத் ஆகிய துதிகளைப் பாடினால் நாகதோஷம், கனவில் பாம்புத்தொல்லை நீங்கும். பஞ்சமுக ஆஞ்சநேயரின் முகங்களில் மேற்கு நோக்கி கருடமுகம் அமைந்திருக்கும். சனிக்கிழமைகளில், பெருமாள் கோயில்களில் உள்ள கருடனை தரிசிப்பவர்களுக்கு எல்லா நலன் களும் உண்டாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us