ADDED : அக் 13, 2017 11:25 AM

இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் தராசு போல இருக்க வேண்டும் என்று சொல்வர். நியாயத்தின் குறியீடான தராசை, 'துலாக்கோல்' என்பர். தீபாவளி மாதமான ஐப்பசிக்கு 'துலா மாதம்' என்று பெயர்.
வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் தராசு போல நடப்பவனே நீதிமான். உயிர்களை துன்புறுத்திய நரகாசுரனை, பெற்ற பிள்ளை என்ற குறுகிய எண்ணத்துடன் திருமாலும், சத்தியபாமாவும் ஆதரிக்கவில்லை. அவனைக் கொன்று உலக உயிர்களை காப்பாற்றினர். நீதி உணர்வும், மன உறுதியும் வேண்டும் என்பதே தீபாவளி உணர்த்தும் பாடம்.