ADDED : ஜூலை 08, 2011 10:29 AM

கோபமாக பேசும் பெண்களையும், சேஷ்டை செய்யும் பெண் குழந்தைகளையும், 'அடியே பிடாரி' என திட்டுவது
வழக்கம். 'பிடாரி' என்ற சொல்லுக்கு 'கோபக்காரி' என்று பொருள் கொள்வது சரியல்ல. 'பீடோபஹாரி' என்பதே 'பிடாரி' ஆயிற்று. இதற்கு 'பீடைகளை நீக்குபவள்'என்று பொருள். பிடாரிக்கு தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை
மருதூர் அருகிலுள்ள திருநீலக்குடி கிராமத்தில் கோயில் உள்ளது. இங்குள்ள பிடாரி பத்மபீடத்தில் (தாமரை பீடம்) சுகாசனமாக அமர்ந்திருக்கிறாள். ஜ்வாலா கிரீடம் (நெருப்பு கிரீடம்) சூடி, டமருகம் என்னும் உடுக்கை, பாசம், சூலம், கபாலம் கைகளில் ஏந்தி காட்சி தருகிறாள். இவளை வழிபட்டால் எல்லா பீடைகளும் நீங்கி ஏழ்மையில் இருந்து விடுபட்டு சுகமான வாழ்வு பெறலாம்.