ADDED : ஜூன் 14, 2024 12:56 PM

சப்தமாதர் வரிசையில் ஆறாவதாக இருப்பவள் கவுமாரி. முருகப்பெருமானின் அம்சமாகத் திகழும் இவளுக்கு 'இளையவள்' என பொருள். அத்தி மரத்தின் கீழ் மயில் வாகனத்தில் காட்சி தரும் இவள் முன் இரு கைகளில் ஒன்று வரம் தரும் நிலையிலும், மற்றொன்று அபயம் தரும் நிலையிலும் இருக்கும். மற்ற கைகளில் வேல், சேவல் கொடி, தண்டம், வில், பாணம், கந்தம், பத்மம், பத்ரம், கோடரி இடம் பெற்றிருக்கும். கவுமாரிக்கு சிவப்பு நிற மலர்கள் ஏற்றவை. வீரத்தின் வடிவமான இவளை செவ்வாயன்று வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.