Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/திருமந்திரம்

திருமந்திரம்

திருமந்திரம்

திருமந்திரம்

ADDED : மே 24, 2024 09:31 AM


Google News
Latest Tamil News
பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக உள்ளது திருமந்திரம். இந்நுாலை எழுதியவர் திருமூலர். இவர் நாயன்மார்களில் ஒருவராகவும், சித்தர்களில் ஒருவராகவும் இருக்கிறார். திருமூலர் ஆண்டுக்கொரு பாடலாக 3000 ஆண்டுகள் வாழ்ந்து 3000 பாடல்களை எழுதினார். இதற்கு திருமந்திர மாலை, தமிழ் மூவாயிரம் என்றும் பெயருண்டு. சைவ சித்தாந்தம் என்னும் சொல் இடம்பெற்றுள்ள முதல்நுால் இதுவே. தந்திரங்கள் என்னும் தலைப்பில் ஒன்பது பிரிவுகள் உள்ளன. 'ஐந்து கரத்தனை யானை முகத்தனை' எனத் தொடங்கும் பாடல் கடவுள் வாழ்த்தாக உள்ளது.

பின்வரும் புகழ் மிக்க சொற்றொடர்கள் இந்நுாலில் உள்ளன.

* அன்பே சிவம் n ஒன்றே குலம் ஒருவனே தேவன்

* யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

* என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

* நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் (நடமாடும் கோயிலான வறியவர்களுக்கு உதவி செய்யுங்கள்)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us