Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/என் தம்பி 'கேவட்'

என் தம்பி 'கேவட்'

என் தம்பி 'கேவட்'

என் தம்பி 'கேவட்'

ADDED : ஏப் 12, 2024 03:07 PM


Google News
Latest Tamil News
வனவாசம் சென்ற ராம, லட்சுமணர் கங்கை கரைக்குச் சென்றனர். அங்கு நின்ற ஓடக்காரன் 'கேவட்' முகமலர்ச்சியுடன் வரவேற்றான். ராமாயணத்தில் கேள்விப்படாத பாத்திரமாக இருக்கிறதே என வியக்கிறீர்களா?

துளசிதாசரின் ராமாயணத்தில் வேடுவர் தலைவனான குகனுக்கு 'கேவட்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அவனுக்கு தர வேண்டிய கூலிக்காக, சீதை தன் மோதிரத்தை கொடுத்தாள். இதை கண்ட கேவட், “சுவாமி! நாம் இருவரும் ஒரே தொழில் செய்பவர்கள். ஆற்றைக் கடக்க வைக்கும் ஓடக்காரன் நான். பிறவிக் கடலைக் கடக்க உதவும் ஓடக்காரர் நீங்கள். ஒரே தொழில் செய்யும் நாம் ஒருவருக்கொருவர் கூலி வாங்குவது தர்மம் ஆகாது” என மறுத்தான். அவனது அன்பை கண்ட ராமர், “என் தம்பியான உன்னையும் சேர்த்து தசரதருக்கு ஐந்து பிள்ளைகள் ஆகி விட்டோம்” என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us