Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/ஆனந்த ராமாயணத்தில்...

ஆனந்த ராமாயணத்தில்...

ஆனந்த ராமாயணத்தில்...

ஆனந்த ராமாயணத்தில்...

ADDED : மார் 22, 2024 10:27 AM


Google News
பங்குனி உத்திரத்தன்று மகாலட்சுமி பாற்கடலில் இருந்து அவதரித்தாள். ஆனால் ஆனந்த ராமாயணம் இந்த வரலாறில் இருந்து மாறுபடுகிறது.

பெருமாள் பக்தரான மன்னர் பத்மாட்சன் காட்டிற்குச் சென்று தவ வாழ்வில் ஈடுபட்டார். காட்சியளித்த பெருமாள் விரும்பும் வரமளிப்பதாக கூறினார். “எனக்கு மகாலட்சுமியே மகளாக பிறக்க வேண்டும்” எனக் கேட்டார். பெருமாள் மாதுளம்பழம் ஒன்றைக் கொடுத்து, “உன் விருப்பம் விரைவில் நிறைவேறும்” என்றார். அந்தப்பழம் பெரிதாக வளர்ந்தது.

வியப்படைந்த மன்னர் அதை வெட்டிப் பார்த்த போது, ஒருபாதியில் மாதுளை முத்துக்களும், மறுபாதியில் பேரழகு மிக்க பெண் குழந்தையும் இருப்பதைக் கண்டார். செந்தாமரை போல சிரித்த முகத்துடன் காட்சியளித்ததால் குழந்தைக்கு 'பத்மை' என பெயரிட்டார். மாதுளம் பழத்தில் இருந்து மகாலட்சுமி தோன்றியதால், மாதுளை செடி இருக்கும் இடத்தில் மகாலட்சுமி குடியிருப்பாள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us