ADDED : பிப் 23, 2024 11:22 AM
கும்பகோணத்தை 'குடந்தை' என ஞானசம்பந்தர் தேவாரப்பதிகம் கூறுகிறது.
வடிவுடை வாள் தடங்கண் உமை அஞ்சவோர்
வாரணத்தைப் பொடியணி மேனி மூடவுரி கொண்டவன் புன்சடையான்
கொடிநெடு மாடம் ஓங்கும் குழகன் குடமூக்கிடமா
இடிபடு வானம் ஏத்த இருந்தானவன் எம்மிறையே.
வாள் போல கூரிய விழிகளைக் கொண்டவள்
பார்வதி. அவள் பயப்படும்படி யானை வடிவ
அசுரனைக் கொன்று தன் உடலில் போர்த்திக்
கொண்டவர் சிவபெருமான். உடம்பெங்கும்
திருநீறு அணிந்தும், ஜடாமுடி தரித்தும் இருக்கும் அவர் உயர்ந்த மாடங்கள் சூழ்ந்த கும்பகோணத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.
மழை வளம் மிக்க அந்த தலத்தில் தேவர்களும் வழிபட்டு பலன் அடைகின்றனர்.