ADDED : பிப் 09, 2024 11:27 AM
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுாரில் உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். 2000 ஆண்டுகள் பழமையானது. இங்கு அமாவாசையன்று நள்ளிரவில் ஊஞ்சல் உற்ஸவம் நடக்கும். அப்போது மூலவருக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடக்கும். பின்னர் உற்ஸவர் அங்காளம்மன் சர்வ அலங்காரத்தில் காட்சியளிப்பார்.