அமாவாசையன்று ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை போன்ற கடல் தலங்களிலும், காவிரி, தாமிரபரணி போன்ற ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம், திதி கொடுப்பர். அப்போது சிலர் வந்தும் வராததுமாக தண்ணீரில் நீராட இறங்குவர். இந்த தவறைச் செய்யக் கூடாது. முதலில் கரையில் நின்றபடி தீர்த்தத்தைத் தலையில் தெளிக்க வேண்டும். ஏனெனில் தீர்த்தமும் கடவுளும் ஒன்றே. முன்வினைகளை போக்கும் மாமருந்து தீர்த்தம்'' என்கிறார் வாரியார்.
'மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய் தொடங்கினாருக்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே' என்கிறார் தாயுமானவர். தீர்த்தங்களை கடவுளாகக் கருதுவது நம் மரபு. மேலும் ஓரிடத்தில் கடவுள் விரும்பி உறைவதற்கு அங்குள்ள புனிதத் தீர்த்தமே காரணம்.