கிருதயுகம் - தவம்
திரேதாயுகம் - யாகம்
துவாபரயுகம் - பாத சேவை
கலியுகம் - பகவான் நாமத்தை சொன்னால் ஆன்மாக்களாகிய உயிர்களுக்கு முக்தி என்று அருளாளர்கள் சொல்வர். (விநாயகா, முருகா, சிவ, ராம என்பன பகவானின் நாமங்கள்)
எந்த தெய்வத்தின் நாமத்தையும் ஒருவர் கேட்பதற்கும் சொல்வதற்கும் நினைப்பதற்கும் குருநாதர் தேவைப்படுவார். ஆனால் ராம நாமத்தை சொல்வதற்கும் கேட்பதற்கும் நினைப்பதற்கும் பிறரின் உதவி தேவையில்லை. அதனால் தான் ராம நாமத்தை நினைக்க, சொல்ல எழுத புண்ணியம் செய்து இருக்க வேண்டும். நாமங்களிலே அது ராஜ நாமம் என்பர்.
* கலியுகத்திற்கு உகந்தது ராம நாமம்.
* தேவலோகத்திலுள்ள காமதேனு, கற்பக விருட்சம், சிந்தாமணி எதைக் கேட்டாலும் கொடுக்கும், ஆனால் ராமநாமம் நல்லதை மட்டுமே தரும்.
* நல்ல பாதையில் செல்பவர்களுக்கு ராம நாமம் விருந்து.
* நல்வழிப்பாதையை மீறியவர்களுக்கு ராம நாமம் மருந்து.
* ராம நாமத்தை சொல்பவரின் பயத்தை போக்கி அபயத்தை தரும்.
* ராம நாமத்தால் புத்தி, மனம், தெளிவு பெற்று திருப்தி அடையும்.
* ராம நாமம் நீதி சொல்லியும் நிதியும் தரும்.
* ராம நாமத்தினை எந்த அசுத்தமும், எந்த தீட்டும் பாதிக்காது.
* ராம நாமத்தினால் இவ்வுலகில் மேன்மை அடைந்தவர்களை கணக்கில் அடக்கமுடியாது.
* ராமனும் அவருடைய திருநாமமும் ஒன்று தான். வேறு வேறு அல்ல.
அதனால் ராம நாமத்தை இடைவிடாது சொல்பவர் பரபிரம்மாகவே ஜொலிப்பார்.