ADDED : ஜன 19, 2024 01:52 PM

ஸ்ரீராமர் தன் தந்தையின் கட்டளைப்படி பதினான்கு ஆண்டு வனவாசம் செல்ல தயாரானார். அப்போது அவரது தாயாரான கவுசல்யாதேவி அவரிடம், 'ராகவா. நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை காக்கும்' என ஆசி வழங்கினாள். இதை மனதில் ஆழமாக பதித்துக் கொண்டார்.
ஸ்ரீராமர் காட்டிற்கு செல்வதை அறிந்த லட்சுமணன், 'அண்ணா. தர்மத்தின் மீது நீ மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதால்தான் இந்த நிலைக்கு வந்துவிட்டாய். தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை நான் கைப்பற்றுகிறேன். அனுமதி தா' என அன்பின் மிகுதியால் கேட்டான். அதற்கு அவரோ, 'தர்ம வழியில் சென்றால் அதுவே நம்மை காப்பாற்றும்' என்றார். இப்படி தர்மத்தின் மறுவடிவமாக திகழ்ந்தார் ஸ்ரீராமர்.