ADDED : டிச 22, 2023 05:04 PM

நாயகர் என்ற சொல்லுக்கு தலைவர் என பொருள். பலரையும் வழிநடத்துபவரை 'சபாநாயகர்' என அழைப்பர். பயனுறும் திட்டங்களை செயல்படுத்த மக்களவை, மாநிலங்களவையிலும் மக்கள் பிரதிநிதிகளில் ஒருவரை சபாநாயகராக தேர்ந்தெடுப்பர். அவர் முன்னிலை மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றம் செய்யப்படும்.
அண்ட சராசரங்களை வழிநடத்தும் தெய்வத்தின் மீது இயற்றப்படும் போற்றிப்பாடல்களில் அண்டர் நாயகர், ஆளும் நாயகர், எங்கள் நாயகர், ஏகநாயகர், பூதநாயகர்... என நாயன்மார்களும், ஆழ்வார்களும் போற்றுவார்கள். ஹிந்து மக்களின் கோயில் எனப்படும் சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்கு 'சபாநாயகர்' என்ற சிறப்பு பெயருண்டு. இவர் புல் முதல் பிரம்மன் வரையிலான எல்லா உயிர்களுக்கும் அவரவரின் பாவ புண்ணிய வினைகளுக்கு ஏற்ப சரியான முறையில் நியாயமான தீர்ப்பினை வழங்குவார். எப்பிறவியில் செய்த தவறாக இருந்தாலும் கால நியதிப்படி இடம், பொருளறிந்து தீர்வு தருவார். அதைப்போல மக்களுக்கு நன்மை செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் தலைவருக்கு சபாநாயகர் என பெயரிட்டு அழைக்கிறார்கள் போலும்.